RESULTS

Notification"Combined Civil Services Examination - IV (Group-IV Services) "Notification Date-30.01.2024" "Last date-28.02.2023" "Exam Date-09.06.2024 9.30 மு.ப முதல் 12.30 பி.ப வரை”"

Monday 11 September 2017

முக்கிய அரசாணைகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள்

W. P. NO - 5550/2016, DT - 1.8.2016, Natarajan Vs Adhi Thiravidar Welfare Department, Chennai and others
தமிழ்நாடு குடிமுறை அரசுப் பணி ஒழுங்கு மற்றும் மேல்முறையீட்டு விதிகள் - விதி 17(e)-Fundamental Rule - 6, 53(1) - ஓர் அரசு ஊழியர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பாக அவரை பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படி செல்லாது. ஒரு அரசு ஊழியர் ஏதாவது போலியாக ஒரு ஆவணத்தை தயாரித்து பணியில் சேர்ந்துள்ளார் என்ற குற்றச்சாட்டை அவர் ஓய்வு பெறும் நிலையில் வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது. அந்த அரசு ஊழியரின் பணி நியமனத்தின் போதே அதனை சரிபார்த்து அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசு ஊழியர் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் கழித்து அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பாக 25 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற ஒரு சம்பவத்திற்காக தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டால் அது தவறு. அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வது குறித்து 8.6.2007ம் தேதியில் G. O (MS) NO - 144 என்ற அரசாணை உள்ளது. அந்த அரசாணை படி ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளில் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், அந்த அரசு ஊழியர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு அவர் மீது விசாரணை மேற்கொள்ளப் பட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட அரசாணைக்கு முரணாக ஒரு அரசு ஊழியரை ஓய்வு பெறுவதற்கு முன்பாக 3 மாத காலத்தில் பணி நீக்கம் செய்தால் அது சட்ட விரோதமாகும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. W. P. NO - 5550/2016, DT - 1.8.2016, Natarajan Vs Adhi Thiravidar Welfare Department, Chennai and others