RESULTS

Notification"Combined Civil Services Examination - IV (Group-IV Services) "Notification Date-30.01.2024" "Last date-28.02.2023" "Exam Date-09.06.2024 9.30 மு.ப முதல் 12.30 பி.ப வரை”"

Thursday 20 April 2017

உலகப் பெருங்கடல் தினம்

உலகப் பெருங்கடல் தினம் -  June- 8
பசிபிக் கடல், அட்லாண்டிக் கடல் ஆகியவை 500 ஆண்டுகளுக்கு முன்புத்தான் அனைவராலும் அறியப்பட்டது. ஆனால் இந்திய பெருங்கடல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  உலக கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியதாக வரலாற்று சான்றுகள் உள்ளன.

உலக பெருங்கடல் தினம் கொண்டாடாடுவதில் தமிழர்கள் முக்கியமானவர்கள்  என்று ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பேர் உணவு மற்றும் வருவாய்க்கு கடலை நம்பி உள்ளனர்.



52 சதவீத மீனவர்களுக்கு கடலில் தான் வாழ்க்கையே உள்ளது.  நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 70 முதல் 80 சதவீதம் கடல் மூலமாக தான்  கிடைக்கிறது. இப்படி நமக்குத் தேவையானதை அளிக்கும் கடலில்  ஒவ்வொரு ஆண்டும் கழிவு நீர், எண்ணெய் கசிவுகளோடு சுமார் 8.8 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதாகவும் இது அடுத்த 2025 ஆண்டுக்குள் கடலில் பிளாஸ்டிக் துகள்களின் எண்ணிக்கை சுமார் 170 மில்லியன் டன்னாக  இருக்கும் என்று கடல்சார் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடல் மாசு காரணமாக ஆசிய மற்றும் அமெரிக்க நாடுகளில் சுவாசம் தொடர்பான நோய்கள், உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடும் அளவிற்கு அதிகமாக  பரவத் துவங்கியதால் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உலக நாடுகளுக்கு ஏற்படத் துவங்கியுள்ளது.

இந்நிலையில், கடலோர பகுதிகளில் வணிகரீதியில் வளாகம் அமைக்க மத்திய அரசு முயற்சி செய்வதை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தள்ளது.

சென்னைவாசிகளின் வாழ்க்கையோடு பிரிக்க முடியாத இடம் என்றால் அது  கடற்கரை தான். குடும்பத்தினருடன் குதுகலிக்க  இதை விட சிறந்த இடம் வேறெதுவும்  இருக்கவே முடியாது. நம் உணர்வுகளோடு கலந்த இந்த கடற்கரையை  காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு என்பதை நினைவூட்டவே இந்த உலக கடல் தினம்.

No comments:

Post a Comment