RESULTS

Notification"Combined Civil Services Examination - IV (Group-IV Services) "Notification Date-30.01.2024" "Last date-28.02.2023" "Exam Date-09.06.2024 9.30 மு.ப முதல் 12.30 பி.ப வரை”"

Thursday 8 December 2016

FIVE YEAR PLANS

இந்திய பொருளாதார திட்டமிடுதலின் வரலாறு:

பொருளாதார திட்டமிடுதலை முதன் முதலில் கூறிய அறிஞர் - விஸ்வேஸ்வரய்யா
தேசிய திட்ட கமிஷன் 1938 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது.
1934 - ஆம் ஆண்டு இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர்- விஸ்வேஸ்வரய்யா.
1944 - ஆம் ஆண்டு தேசிய திட்டமிடலில் முதன் முயற்சியாக  8 முன்னணி தொழில் அதிபர்களால் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு திட்டம் என்ற நாடு முழுமைக்கான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. அதுவே பம்பாய் திட்டம் எனப்பட்டது.
1945 - காந்திய திட்டம் - ஸ்ரீமன் நாராயணன்
1950 - மக்கள் திட்டம் - M.N. ராய்



தேசிய திட்டக் குழு:
தேசிய திட்டக்குழு மார்ச் 15, 1950 இல் தொடங்கப்பட்டது.
திட்டக் குழுவின் முதல் தலைவர் - ஜவஹர்லால் நேரு.
திட்டக்குழுவின் முதல் துணைத் தலைவர் - குல்சாரிலால் நந்தா.
திட்டக் குழுவின் உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்.
திட்டகுழு அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு.

திட்டக் குழுவின் நோக்கம்:
நாட்டின் பொருளாதாரம் மூலதனம் மனிதவளம் ஆகியவற்றை மதிப்பிடு செய்தல்.
செல்வங்களை ஆராய்ந்து அவற்றை ஒதுக்கீடு செய்தல்.
செல்வங்களை ஆராய்ந்து அவற்றை ஒதுக்கீடு செய்தல்
விவசாயம், தொழில்துறை, மின்சாரத் துறை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பிற துறைகளில் வேகமான வளர்ச்சி.
சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை நீக்குதல்.

தேசிய வளர்ச்சிக் குழு:
தேசிய வளரச்சிக் குழு 15.08.1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தேசிய வளர்ச்சிக் குழு ஒரு சட்டப்பூர்வ அமைப்பு.
தேசிய வளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்கள் - மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள்.
தேசிய வளர்ச்சி குழுவின் முக்கியப் பணி:
ஐந்தாண்டு திட்டத்திற்கு இறுதி அங்கீகாரம் அளித்தல்.

மாநில திட்டக் குழு:
மாநில திட்டக்குழுவின் தலைவர் மாநில முதல்வர்.
மாநில திட்டக்குழுவின் உறுப்பினர்கள் மாநில நிதி அமைச்சர் மற்றும் பொருளாதார நிபுணர்கள்.
ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் காண 1928 ஆம் ஆண்டிலேயே முயன்ற முதல் நாடு சோவியத் ரஷ்யா.

முதல் ஐந்தாண்டுத் திட்டம்: 1951 - 1956
முதல் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்தவர் - ஹரோல்டு தோமர்
முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயத்துறை.
சமூக முன்னேற்ற திட்டம் 1952-ல் தொடங்கப்பட்டது.
வேளாண்மை தவிர நீர்ப்பாசனம், மின் உற்பத்தி, போக்குவரத்து தொழில் துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.


முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட முக்கிய அணைகள்:
தாமோதர் அணை, ஹிராகுட் எணை, பக்ராநங்கல் அணை, கோசி அணை, சாம்பல் அணை, நாகார்ஜூனா அணை, மயூராக்ஸி அணை போன்றவை.

இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்: 1956 - 1961
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் P.C.மஹலநோபிஸ்.
முக்கியத்துவம் தரப்பட்ட துறை தொழில் துறை.
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்ட முக்கிய கனரக தொழிற்சாலைகள்:
ரஷ்யா உதவியுடன் பிலாய் கனரக தொழிற்சாலை.
பிரிட்டன் உதவியுடன் துர்காபூர் கனரக தொழிற்சாலை.
ஜெர்மனி உதவியுடன் ரூர்கேலா கனரக தொழிற்சாலை.
தசம முறையில் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அணுசக்தி ஆணையம் ஹோமிபாபா தலைமையில் அமைக்கப்பட்டது.

மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்: 1961 - 1956
மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் - P.C. மஹல நாபிஸ்.
மூன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் தற்சார்பு திட்டமாகும்.
பணமதிப்பு 36 சதவிகிதம் உயர்தல்
சீனர் படையெடுப்பு, பாகிஸ்தான் போர், பஞ்சம் போன்ற காரணங்களால் மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் படுதோல்வி அடைந்தது.

ஆண்டுத் திட்டம்: 1966 - 1969
இது திட்ட விடுமுறை காலமாகும்
இக் காலக்கட்டத்தில் புசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
முக்கியத்துவம் தரப்பட்ட துறை, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் தொழில் துறை.

நான்காம் ஐந்தாண்டு திட்டம்: 1969 - 1974
நான்காம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோள், நிலையான வளர்ச்சி மற்றும் தன்னிறவை.
பாகிஸ்தான் போருக்குப் பின், பங்காளதேஷ் அகதிகள் வருகை, பணவீக்கம் உயர்தல் போன்ற காரணத்தால் நான்காம் ஐந்தாண்டு திட்டம் தோல்வி அடைந்தது.

ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்: 1974 - 1979
ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் மறுபெயர் குறைந்தபட்ச தேவை திட்டம்.


ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோள் வறுமையை ஒழித்தல்.
ஒர் ஆண்டுக்கு முன்பே நிறுத்திக் கொள்ளப்பட்ட திட்டமாகும்.
இந்திராகாந்தி அவர்களால் இருபது அம்சத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கரிபீ ஹட்டாவோ என்ற வறுமை ஒழிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஊரக வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சுழற்சி திட்டம்: 1978 - 1980
இது ஜனதா அரசு திட்டமாகும்.
முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயம்  அது தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு அளித்தல்.
குடிசை மற்றும் சிறுதொழிலை மேம்படுத்துதல்.குறைந்தபட்ச வருமானம் பெருபவர்களைக் குறைந்தபட்ச தேவை அடைய வைக்கவும் முக்கியத்துவம் தரப்பட்டது.

ஆறாம் ஐந்தாண்டு திட்டம்: 1980 - 1985
ஆறாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்
வருமான ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதன் மூலம் வறுமையை அகற்றுதல்.
குறைந்தபட்ச தேவை திட்டமும், ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டமும் கொண்டுவரப்பட்டன.

ஏழாவது ஐந்தாண்டு திட்டம்: 1985 - 1990
ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்
உணவு, வேலைவாய்ப்பு, உற்பத்தித் திறன, தற்சார்பு ஆகியவை பெருகுதல்.
ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தில் அறிமுகப்படுத்திய முக்கிய திட்டங்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தையும் ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு திட்டத்தையும் இணைத்து ஜவஹர் ரோஜ்கர் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
வேலைக்கு உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
முதன் முதலில் தனியார் துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

ஆண்டுத் திட்டம்: 1990 1992
இந்த ஆண்டு திட்டத்தில் சமூக மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்.
இந்த ஆண்டு திட்டத்தில் இந்தியா உலக சந்தையில் நுழையத் தொடங்கியது.



எட்டாவது ஐந்தாண்டு திட்டம்: 1992 - 1997
எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்:
முழு வேலைவாய்ப்பு, தொடக்கக்கல்வி, மனிதவளமேம்பாடு, மக்கள் தொகை கட்டுப்பாடு, வேகமான பொருளாதார வளர்ச்சி.
புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைபடுத்தப்பட்டது.
பிரதம மந்திரி ரோஜ்கர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்: 1997 - 2002
ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்.
வேளாண்மை, கிராம வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் 2004க்குள் முழு கல்வி.
ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய கொள்கை வளர்ச்சியுடன் கூடிய சமநிதி மற்றும் சமத்துவம்.
ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தில் இந்திய சுதந்திர பொன்விழா கொண்டாடியது. சர்வ சிக்க்ஷ அபியான் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பத்தாம் ஐந்தாண்டு திட்டம்: 2002 - 2007
பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்:
நேரடி அந்நிய முதலீடு, தொழிலாளர் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கிராம வளர்ச்சி.
தலா வருமானம் பத்து ஆண்டுக்குள் இரண்டு மடங்கு அதிகரித்தல்.
கல்வி அறிவு 75 சதவிகிதம் அதிகரித்தல்.
2011க்குள் மக்கள் தொகை வளர்ச்சி 16 சதவிகிதம் குறைத்தல்.

பதினோராவது ஐந்தாண்டு திட்டம்: 2007 - 2012
மொத்த உள் நாட்டு உற்பத்தி 8 முதல் 10 சதவிகிதம் அதிகரித்தல்.
வேளாண்மை உற்பத்தி ஆண்டுக்கு 4 சதவிகிதம் அதிகரித்தல்.
70 மில்லியன் புதிய வேலைவாய்ப்பு உருவாக்குதல்
வறுமையை 10 சதவிகிதம் குறைத்தல்.
கல்வி:
ஆரம்ப கல்வி நிலையத்திற்கு மேல் செல்லாத குழந்தை விகிதம் 52 சதவிகிதமாக குறைத்தல்.


7 வடதுக்கு மேற்பட்ட கல்வி கற்கும் குழந்தை விகிதத்தை 85 சதவிகிதம் அதிகரித்தல்.
சுகாதாரம்:
குழந்தை இறப்பு விகிதம் 28 ஆகவும்,
பிரசவத்தின் போது இறக்கும் இறப்பை 1000க்கும் 1 எனவும் குறைத்தல்.
மொத்த கருவுறு விகிதத்தை 2 சதவிகிதம் குறைத்தல்.
2009 க்குள் அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்குதல்.
ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் விகிதம் 50 சதவிகிதம் குறைத்தல்.

மகளிர் மற்றும் குழந்தைகள்
ஆண் பெண் பால்விகிதத்தை 2011 - 12க்குள் 935 ஆக உயர்த்துதல் மற்றும் 2016-17க்குள் 950 ஆக
உயர்த்துதல்.
பெண்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளில் 33 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்து தருதல்.

உள்கட்டமைப்பு:
அனைத்து கிராமங்களிலும் வசதி செய்து தருதல்.
500 மக்கள் தொகை உள்ள மலைவாழ் மக்களுக்கும் 1000 மக்கள் தொகை உடைய கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து தருதல்.
2007 க்குள் அனைத்து கிராமங்களிலும் தொலைபேசி வசதி செய்து தருதல்.
2012 க்குள் அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி செய்து தருதல்.
சுற்றுப்புறச் சூழல்:
வனம் மற்றும் மரங்கள் 5 சதவிகிதம் அதிகரித்தல்.
உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்தவாறு தூய்மையான காற்று வழங்குதல்.

பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டம்: 2012 - 2017
பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்குத் தேசிய வளர்ச்சிக்குழு இறுதி அங்கீகாரம் அளித்த நாள் டிசம்பர் 2012.
பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் பொருளாதார வளர்ச்சி:
மொத்த உள் நாட்டு வளர்ச்சி 8 சதவிகிதம்.
விவசாயத் துறை வளர்ச்சி 4 சதவிகிதம்
உற்பத்தி துறை வளர்ச்சி 7 சதவிகிதம்
தொழிற்சாலை வளர்ச்சி 7.6 சதவிகிதம்


சேவைத்துறை வளர்ச்சி 9.0 சதவிகிதம்

வறுமை மற்றும் வேலைவாய்ப்பு:
10 சதவிகிதம் வறுமையை ஒழித்தல்
50 மில்லியன் வேலைவாய்ப்பு உருவாக்குதல்
கல்வி:
2 மில்லியன் புதிய கல்வி இடத்தை உருவாக்குதல்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இஸ்லாம் மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தத்தைக் குறைத்தல்.
சுகாதாரம்:
பிறந்த குழந்தை இறப்பு விகிதம் 25 ஆக  குறைத்தல்
பேறுகால இறப்பு 1000க்கு 1 ஆக குறைத்தல்.
உள்கட்டமைப்பு:
விவசாய நிலத்தை 90 மில்லியனிலிருந்து 103 மில்லியனாக அதிகரித்தல்.
அனைத்து கிராமங்களிலும் மின் வசதி செய்து தருதல்.
அனைத்து கிராம சாலைகளை இணைத்தல்
தொகைதொடர்பு நெருக்கத்தை 70 சதவிகிதம் அதிகரித்தல்.
சுற்றுப்புறச் :சூழல்:
ஆண்டுக்கு 1 மில்லியன் ஹெக்டர் வனங்களை உருவாக்குதல்
காற்று மாசுபடுதலை 20 முதல் 25 சதவிகிதம் 2020க்குள் குறைத்தல்.
சேவைத் துறை:
90 சதவிகித இல்லங்களுக்கு வங்கி சேவைகள் அளித்தல்.
அனைத்து குடும்பங்களுக்கு ஆதார் அட்டை வழங்குதல்.

No comments:

Post a Comment